Categories
மாநில செய்திகள்

BREAKING: மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை என்ன?…. வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் எதிரொலியாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், அயனாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் போலவே கும்மிடிப்பூண்டி பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும். புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், தற்போது சென்னையிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டு உள்ளது. இன்று நள்ளிரவு புயல் கரையை கடக்கும். இன்று மதியத்திற்கு மேல் காற்றின் வேகம் அதிகரிக்கும். இன்று மணிக்கு எழுவது கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும் கரையைக் கடந்த மூன்று மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும். இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். புயல் இன்று இரவு 10.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும் என அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |