விடுதலை திரைப்படம் போல ரத்த சாட்சி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் விடுதலை. ரபிக் இஸ்மாயில் இயக்கத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் என பல நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்த சாட்சி. இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பலரும் கூறி வருகின்றார்கள்.
இந்த நிலையில் இதுபற்றி இயக்குனர் ரபிக் இஸ்மாயில் தெரிவித்துள்ளதாவது, இரண்டு திரைப்படங்களும் ஒரே விஷயத்தை பேசினாலும் கதைக்களமும் படத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களும் வேறு வேறு. ரத்த சாட்சி ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தாமல் அமைதியை வலியுறுத்தும் திரைப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.