ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் அன்னாவரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பிஎஸ்சி மாணவி சசிகலா கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் துவ்வடா ரயில்வே நிலையத்திற்கு சென்றார். இவர் ரயிலில் இருந்து இறங்கிய போது திடீரென தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.
இருப்பினும் சசிகலாவை மீட்க முடியாததால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்டவாளத்தின் நடை மேடையை இடித்து மாணவியை மீட்டனர். அதன்பிறகு மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் மாணவியின் உடல் உறுப்புகள் அனைத்தும் படிப்படியாக செயலிழந்து சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
DUVVADA Railway Station pic.twitter.com/JKaKDhylYL
— HEMA NIDADHANA (@Hema_Journo) December 8, 2022