Categories
மாநில செய்திகள்

குப்பை லாரிகளுக்கு காலை, மாலையில் தடை விதிக்க வேண்டும் – ஐகோர்ட்டில் மனு.!!

குப்பை லாரிகளுக்கு காலை, மாலையில் தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில்  மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், பணிக்கு செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் குப்பை லாரிகளை இயக்க தடை தேவை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |