மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹராக்பூர் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சுஜன் சிங் சர்தார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுத் தனுடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவருடன் ரயில்வே நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்திற்கு மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியானது சுஜன் தலையில் விழுந்தது.
இந்த விபத்தில் சுஜன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு ஊழியர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்நிலையில் சுஜன் சுருண்டு விழுந்ததை பார்த்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
A very freak accident happened yesterday (7th dec) at Kharagpur PF#4.
2 TTE were talking to each other when a crow with a thin wire entangled on his feet flew by. The wire came in contact with the high voltage wires & at the same time one of the TTE.
TTE is recovering in hosp. pic.twitter.com/IGtPOK0tIl— Raj Lakhani (@captrajlakhani) December 8, 2022