Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வசூல் வேட்டைக்கு தயாராகும் பொன்னியின் செல்வன்… வெளியான 2-ம் பாகம் குறித்த அப்டேட்..!!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தும் வெளிநாடுகளில் 130 கோடிக்கு வசூல் செய்தும் தமிழகத்தில் மட்டும் 230 கோடி வசூலித்தும் சாதனை படைத்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. இந்த நிலையில் இந்த  படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதம் இருக்கும் படப்பிடிப்பு வருகின்ற 2023-ம் வருடம் ஜனவரி 5 முதல் 10 தேதி வரை நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. முதல் பாகத்திலேயே அதிக வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் மீண்டும் வசூல் வேட்டைக்கு தயாராகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |