அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் , ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதற்காக அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் மத்திய அரசு இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமியை மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு கடிதம் எழுதி அனுப்பியது.
இது ஓபிஎஸ் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் விரைவில் டெல்லிக்கு செல்ல இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் எடப்பாடி தரப்பினரிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.