Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8-ம் தேதி முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகமானது தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புயலின் காரணமாக இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |