Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் அப்பம் மற்றும் மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க குன்னூர் அணையில் இருந்து குழாய் பதிக்கும் திட்டம், பம்பா நதி குறுக்கே புதிய பாலம்,நிலக்கல் அடிவாரத்தில் எட்டு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

Categories

Tech |