Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்கை மூட வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் கேராளா , தலைநகர் டெல்லி என மாநிலம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அந்தந்த மாநில அரசு மேற்கொண்டு வருகின்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதற்கான வாழிகாட்டலை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கி இருந்தது.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது , கேரளாவை போல தமிழகத்திலும் பள்ளிகள் , தியேட்டர்களை மூட வேண்டும்.கொரோனா  குறித்த காலர் டியூனை தமிழில் வெளியிட வேண்டும்.கொரோனா நோய் சிகிச்சை அளிப்பதை விட வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வது ரொம்ப முக்கியம் என்று  தெரிவித்தார்.

Categories

Tech |