Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.12.22) எந்தெந்த தேர்வுகள் ஒத்திவைப்பு….? இதோ வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருகிறது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற இருந்த பல்வேறு தேர்வுகளும் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டது அதன்படி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. இன்று நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் 16ம் தேதிக்கு தள்ளிவைப்பு. இன்று மற்றும் நாளை  நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.

Categories

Tech |