Categories
சினிமா தமிழ் சினிமா

ஆடை குறித்து பேசிய விக்ரமன்… தக்க பதிலடி தந்த சிவின்… வைரலாகும் வீடியோ..!!!

ஆடை குறித்து பேசிய விக்ரமனுக்கு சிவின் பதிலடி தந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் வாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்த நிலையில் இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தகவல் தெரிவித்துள்ளார். இதில் தொடக்கத்திலிருந்து விக்ரமன் நேர்மையாகவும் சமூக பார்வையோடும் தனது கருத்தை தெரிவித்து விளையாடி வருகின்றார். இந்த நிலையில் அவர் ஆடை குறித்து கருத்து தெரிவித்ததற்கு அவரை பலரும் கலாய்த்து வருகின்றார்கள்.

பிக்பாஸ் வீட்டில் சிவின் ஒரு ஆடையை காட்டி இதை நான் அணியட்டுமா என கேட்டதற்கு முதலில் ஏடிகே வேண்டாம் என கூறுகின்றார். பின்னர் விக்ரமன் என்னங்க இது அநியாயம் குழந்தைகள், குடும்பங்கள் என எல்லோரும் பாக்குறாங்க. இந்த நிகழ்ச்சிக்கு இந்த ஆடை தேவையா என கேட்கின்றார். அதற்கு குழந்தைகள் பார்ப்பதற்கும் டிரஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, அவங்களுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து தான் வளர்க்கணும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் விக்ரமனுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |