கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதையடுத்து அப்பெண் கீழே இறங்கி குறுக்கு வழியில் தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக முயன்றுள்ளார். ரயில் நிலையத்திலோ (அ) அதனை ஒட்டிய பகுதியிலோ தண்டவாளம் வழியே கடந்து செல்வது ஆபத்து என்பதுடன் அதற்கு அபராதம், தண்டனையும் விதிக்க வழிவகை இருக்கிறது.
இந்நிலையில் பெண் கடந்து செல்வதற்கு முன் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது. இதை அவரது மகன் கவனித்துள்ளார். உடனே ஓடிசென்ற அவர், தாயாரை கடந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி பிடித்து வைத்துகொண்டார். அவர்கள் இருவரும் தண்டவாளத்திற்கும், நடைமேடைபகுதிக்கும் இடையில் கீழே படுத்து தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.