Categories
சினிமா தமிழ் சினிமா

யாரை டார்கெட் செய்கிறீர்கள்…! என்னோட உணர்வுக்கும் மதிப்பளிக்கும்…. ADK, விக்ரமன் மோதல்…!!!

பிக் பாஸ் சீசன் 6 ஆவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடந்தது. அறுபதாவது நாளை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் கண்ணாமூச்சி ரே ரே போட்டி விறுவிறுப்பாக நடந்தது. முதலில் அமுதவாணன் அனைத்து போட்டியாளர்களையும் 1 நிமிடத்திற்குள் கண்டுபிடித்தார். இதில், அமுதவாணனுக்கு 200 மதிப்பெண்கள் கிடைத்தன. தொடர்ந்து, மேடையேறிய அமுதவாணன், எம்.ஆர்.ராதா வேடத்தில் அட்டக்கத்தி பட பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

ரகுவரனாகவும், அந்நியனாகவும், நேசமணி, நாய் சேகர், மைக்கேல் ஜாக்சன், மன்மதன் கதாபாத்திரங்களில் அனைத்து போட்டியாளர்களும் திறம்பட செயல்பட்டனர்.
தொடர்ந்து, இளைப்பாறிக்கொண்டிருந்தபோது, யாரை டார்கெட் செய்கிறீர்கள் என ஏடிகே, விக்ரமன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி, உங்களிடம் தன்னுடையே நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று ஏடிகே கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.

Categories

Tech |