Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மா ஜெயலலிதாவுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட ஒரே ஒரு புகைப்படம்”….. இணையத்தில் திடீர் வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை வாடகை தாய் முறையில் பிறந்தது. அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையின் நடிகை நயன்தாரா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகை நயன்தாரா ஜெயலலிதாவை சந்தித்து தானே புயலின் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் திடீரென வைரலாகி வருகிறது.

Categories

Tech |