ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பாக பல செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) முடிவுசெய்து இருக்கிறது. நாடு முழுவதும் மூத்தகுடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் முடிவை வருங்கால வைப்புநிதி அமைப்பு பரிசீலனை செய்து வருகிறது.
இது பற்றி இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் வாயிலாக ஓய்வூதிய முறையின் சுமை கணிசமாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது. அவ்வாறு ஓய்வுபெறும் வயதை அதிகரித்தால் ஊழியர்கள் ஓய்வூதிய நிதியில் அதிக பணம் டெபாசிட் செய்வார்கள். இதனால் ஊழியர்களுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில் ஓய்வு பெறுவதற்கான அதிகபட்ச வயது 58 -65 வயது வரை ஆகும். இந்த வரம்பின் கீழ் அனைத்து அடிப்படையிலான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவர். ஐரோப்பிய யூனியனை பொறுத்தவரை அங்கு சராசரியாக ஓய்வுபெறும் வயது 65 வருடங்கள் ஆகும். அத்துடன் டென்மார்க், இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் கிரீஸ் நாடுகளில் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், அமெரிக்காவில் ஓய்வுபெறும் வயது 66 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது..