பிரபல நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.
உலகில் உள்ள பல நாடுகளில் தற்போது அதிக அளவில் கஞ்சா உபயோகத்தில் இருக்கிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கனடா, அமெரிக்கா, உருகுவே, பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய நாட்டில் புற்றுநோய், வாந்தி, தண்டுவட பாதிப்பு, கால் வலி போன்ற கஞ்சா நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜெர்மனி கஞ்சாவை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான சட்டம் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஜெர்மனியில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி அரசு முந்தைய வருடம் இதற்கான வாக்குறுதியை அளித்தது. தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25 கிராம் கஞ்சாவை மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த சட்டம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது நடைமுறைக்கு வந்தால் கஞ்சாவுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கிய முதல் ஐரோப்பிய நாடு என்ற பெயரை ஜெர்மனி பெறும். ஆனால் இந்த திட்டத்திற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.