Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: டிசம். 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு…. பிரதமர் மோடி பங்கேற்பு …!!

குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் 12ஆம் தேதி அங்கு பதவி ஏற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்று மாநில பாரதி ஜனதா கட்சி தலைவர் சி.ஆர் பட்டீல் அறிவித்திருக்கிறார். குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவை காண தேர்தலில் 157 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து, தொடர்ந்து ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநில பாஜக தலைவர் முதலமைச்சர் பதவி ஏற்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

Categories

Tech |