திரையுலகிலுள்ள முன்னணி நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள், சிறுவயது புகைப்படங்கள் அண்மை காலமாக வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் தளபதி விஜய் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதில் ஒன்று நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சச்சின் மற்றும் மற்றொன்று வேலாயுதம் படம் ஆகும்.
இந்த படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியாவின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தன் தாயுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜெனிலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram