Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல், கனமழை எச்சரிக்கை….. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை தொடர்பான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு 3 நாட்களுக்கு அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதோடு, துறைவாரியாக உள்ள களப்பணியாளர்களும் 24 மணி நேரமும் களத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுத்தப் பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் இருப்பதோடு மருந்துகள் அனைத்தையும் போதிய  அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கையும், சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடகடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகை, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேப் போன்று தென்கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏனெனில் மேற்கண்ட மாவட்டங்களில் புயலின் காரணமாக கடல் அலைகளின் உயரம் வழக்கத்தை விட மிக அதிக அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் காரணமாக அனைத்து மக்களும் மாவட்ட ஆட்சியர்களின் அறிவுரையின்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |