தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ளோரா சைனி. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க, குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ளோரா சைனி சமீபத்திய பேட்டியில் தன்னுடைய காதலனால் பட்ட துன்பத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய காதலர் ஆரம்பத்தில் மிகவும் இனிமையானவராகவும், அன்பானவராகவும் இருந்தார். ஷ்ரத்தா விஷயத்திலும் இது தான் நடந்தது.
அவர் என் பெற்றோரிடம் இருந்து என்னை பிரித்து விட்டதால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் அவருடன் சென்ற ஒரு வாரத்தில் அவர் என்னை அடித்து துன்புறுத்தியதோடு பலவிதமாக அவமானப்படுத்தினார். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஒருநாள் இரவு அவர் என்னை கொடூரமான முறையில் அடித்து உதைத்ததால் என்னுடைய தாடை கிழிந்தது. என்னை அடித்ததோடு மட்டுமின்றி கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார்.
அந்த நேரத்தில் என்னுடைய அம்மாவின் குரல் காதுகளில் கேட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் நம் உடம்பில் ஆடை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எல்லாம் யோசிக்க கூடாது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வான் அங்கிருந்து ஓட தான் வேண்டும். நானும் அதே போன்று அங்கிருந்து ஒடி என் அப்பா, அம்மாவிடம் வந்து விட்டேன். அதன்பின் அவருடன் போகக்கூடாது என்று முடிவு செய்து அவர் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் என்று கூறியுள்ளார். மேலும் டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டி ஷ்ரத்தா கொலை செய்தது போன்று தான் என்னுடைய வழக்கும் இருந்தது என்றும் கூறினார்.