Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. சோதனைக்காக விலங்குகளை கொன்னு குவிக்கும் எலான் மஸ்க் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

எலான் மிஸ்கின்  நிறுவனம் மீது விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவை சேர்த்து நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மனிதனின் மூலையில் பொருத்தும் சிப்களை  தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்களை  பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்க உதவுவதோடு, பார்வையற்றவர்களால் பார்க்க முடியும்  என கூறுகின்றனர்.

ஆனால் இந்த சோதனைக்காக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டுள்ளது என அவரது நிறுவன ஊழியர்கள் கூறினர். இதுகுறித்து போலீசார் விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எல்லான் மஸ்க்  மற்றும் நியூராலிங்க் நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை.

Categories

Tech |