ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் யாஷிகா.
தமிழ் சினிமா உலகில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் மூலம் பிரபலமானதைவிட தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வில் கலந்து கொண்டதன் மூலமாகவே இவருக்கு ரசிகர்கள் அதிகமாக ஆரம்பித்தனர்.
இவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் மீண்டும் குணம் அடைந்து அதிலிருந்து மீண்டு வருகின்றார். அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடினார். அப்போது ஒருவர் நீங்க Virgin-ஆ எனக் கேட்டார். அதற்கு யாஷிகா இல்லை நான் ஏர்டெல் என பதில் அளித்து இருக்கின்றார். வெளிநாடுகளில் விர்ஜின் என்ற மொபைல் நெட்வொர்க் இருக்கின்றது. அதை குறிப்பிட்டு கேள்வி கேட்டவருக்கு நோஸ்கட் பதிலை கொடுத்துள்ளார்