Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்கியது!

மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது.

சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வை மார்ச்8 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் கூட்டம் முடிவு செய்தது. அதன் படி கடந்த 8ம் தேதி கூடிய சட்டப்பேரவையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பின்னர் கூட்டம் மார்ச் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது.

அதன் படி இன்று காலை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதனையடுத்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் மானிய கோரிக்கை தாக்கல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர்.

Categories

Tech |