வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் கிடைக்கப் போகிறது. மாண்டஸ் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர். இதற்கு ‘புதையல் பெட்டி’ என்று பொருள். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு தெற்காசிய நாடுகள் இணைந்து பெயர்களை சூட்டுவது வழக்கம்.
Categories
புதிய புயலின் பெயர் காரணம் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!
