Categories
உலக செய்திகள்

நாசானா சும்மாவா?…. பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்…. எப்போம் தெரியுமா?…. நாசா தகவல்….!!!!!

நாசா அனுப்பிய ஓரியன் மின்கலம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது.

அமெரிக்க நாட்டின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் தற்போது மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1  என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கேப் கேனவரல் ஏவுதளத்தில் 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல். எஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

இந்த ராக்கெட்டில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் 9 மணி நேர பயணத்திற்குப் பிறகு 57 ஆயிரம் மயில் தொலைவிலிருந்து ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. மேலும் வருகின்ற 11-ஆம் தேதி விண்கலம் பூமிக்கு திரும்பும்  என நாசா தெரிவித்துள்ளது.

Categories

Tech |