பிரபல நாட்டில் ஒருவர் தனது மகள் உள்ளிட்ட 20 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ நகரில் மத போதகரான சாமுவேல் ராப்பிலி பேட்மேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு இவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி என கூறி வந்துள்ளார். மேலும் இவர் தனது மகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளார்.
அதில் பாதி பேர் 15 வயது சிறுமிகள் ஆவர். மேலும் இவர் தனது மகள்களுடன் குழுவின் உறுப்பினர்களையும் உடலுறவில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருந்ததாவது “இறைவனுக்காக சிறுமிகள் தங்களது நல்லொழுக்கத்தை தியாகம் செய்தார்கள். அதனால் கடவுள் அவர்களது உடலை சரி செய்து உடலில் சவ்வை மீண்டும் வைப்பார்” என கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து எப்.பி.ஐ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.