Categories
இந்திய சினிமா சினிமா

“சாதாரண ஆளா இருந்தா இப்ப ஜெயில்ல இருந்திருப்பாரு”…. மோகன்லால் வழக்கில் கேரள அரசு மீது கோர்ட் கடும் அதிருப்தி….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன் லால். இவருடைய வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கேரளா அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மோகன்லால் இறந்த யானையின் தந்தைத்தை தான் எடுத்துள்ளார் என்றும் அவர் சட்டத்தை எதுவும் மீறவில்லை எனவும் கேரள அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் ஒரு சாமானிய மனிதராக இருந்தால் அரசு இத்தனை விளக்கம் அளித்து, தளர்வு கொடுக்குமா என்ற கேள்வி எழுப்பினர். மேலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று கூறிய நீதிபதிகள் மோகன்லால் இதே ஒரு சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் அவர் சிறையில் இருந்திருப்பார் என்று கூறினார்.

Categories

Tech |