உத்தரபிரதேசம் அரசானது தன் மாநில இளைஞர்களை கல்வித்துறையில் ஊக்குவிக்கும் அடிப்படையில் ஒரு சிறந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் வழங்குவதாகும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆகவே இத்திட்டத்தை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் நாம் இப்பதிவில் காண்போம்.
இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் எந்த ஒரு மாணவரும் உத்தரப்பிரதேசத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இதையடுத்து இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவர் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 65 % மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பிக்கும் இளைஞர்கள் முதுகலை, பட்டப்படிப்பு, துணைமருத்துவம் (அ) திறன் மேம்பாடு படித்தவராக இருக்கவேண்டும். மேலும் மாணவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சம் (அ) அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். அதுமட்டுமின்றி மாணவர்கள் சில முக்கியமான ஆவணங்களையும் வைத்திருக்கவும்.
முக்கியமான ஆவணங்கள்
# ஆதார் அட்டை
# வசிப்பிட சான்று
# முந்தைய வகுப்பு தேர்ச்சி சான்று
# பள்ளி அடையாள அட்டை
# மொபைல் எண்
# பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
மாணவரிடம் இந்த தேவையான ஆவணங்கள் இருப்பின், அவர் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர் மற்றும் up.gov.inல் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் உத்தரபிரதேச அரசால் ஆகஸ்ட் 19, 2021 அன்று தொடங்கப்பட்டது ஆகும்.