தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு உதவும் வகையிலான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களின் சிரமத்தை போக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பாக வீடு தேடி வரும் 20 நடமாடும் காய்கனி அங்காடித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தே காய் உள்ளிட்ட தேவையான பொருட்களை இந்த நடமாடும் காய்கனி அங்காடியில் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் விரைவில் தமிழக முழுவதும் கொண்டுவரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.