தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. டைரக்டர் டி. ராஜேந்தரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறையில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையில் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் சூழ்நிலையில், தற்போது அதுகுறித்து டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ராஜேந்தர் பேட்டி அளித்தபோது “என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதைவிட, எனது மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் தன்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என கேட்கின்றனர். கடவுள் அருளால் கூடியவிரைவில் என் மகனின் திருமணம் நடைபெறும்” என கூறினார்.