கர்நாடகாவில் வாலிபரை மர்ம கும்பல் ஒன்று கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் கே.பி அக்ரஹாரா பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் 30 வயது வாலிபரை நள்ளிரவு நேரத்தில் ஒரு மர்ம கும்பல் ஒன்று சுற்றிவளைத்தது. இந்நிலையில் 3 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட அந்த கும்பல் திடீரென நடுத்தெருவில் தள்ளி அந்த வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளது. அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் சாலையோரமாக கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து வாலிபரின் தலையில் போட்டுள்ளார். இதனையடுத்து வாலிபரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தபோது அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. பின்னர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கர்நாடகாவின் பால் கோர்ட் மாவட்டத்தில் பாதமி பகுதியைச் சேர்ந்த பலப்பா ஜம்கண்டி என்பவர் என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த சி.சி.டி.வி காட்சிகள் மூலமாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில் அந்தப் பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வரும் குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.