Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன்”…. ஆனா கடைசில ஏமாந்துட்டேன்…. விஜய் சேதுபதி வருத்தம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அண்மையில் டிஎஸ்பி திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ஜவான் மற்றும் விடுதலை போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் நான் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க இருந்தேன். அந்தப் படத்தில் கதை எல்லாம் கூறிய பிறகு நானும் சம்மதித்து விட்டேன். ஆனால் அதன் பிறகு அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. அந்த படத்தில் நான் நடிப்பதற்கு நான் ஆவலாக இருந்த நிலையில் பதில் வரும் என்று காத்திருந்து ஏமாந்து போனேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி சொன்னது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |