Categories
சினிமா தமிழ் சினிமா

“என் பெற்றோரை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரு”…. அவர் ஒரு சாடிஸ்ட்…. விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாடகி….!!!!!

மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் பார்வை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அதன் பிறகு வைக்கம் விஜயலட்சுமி தமிழில் பாடிய சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமண நிச்சயிக்கப்பட்ட நிலையில், அந்த மணமகன் ஏராளமான கண்டிஷன் போட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆன அனூப் என்பவரை திருமணம் செய்து கொண்ட வைக்கம் விஜயலட்சுமி கடந்த வருடம் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார். இந்நிலையில் வைக்கம் விஜயலட்சுமி ஒரு பேட்டியில் தனக்கு விவாகரத்தான காரணம் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, எங்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஆரம்பித்துவிட்டது.

அவர் எப்போதும் என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் சாடிஸ்ட். எனக்கு அவர் நிறைய கண்டிஷன்கள் போட்ட நிலையில் ஒரு கட்டத்தில் நான் பாட்டு பாடுவதற்கும் பல்வேறு கண்டிஷங்களை போட ஆரம்பித்து விட்டார். என்னால் பாடல் இல்லாமல் இருக்கவே முடியாது. எனவே ஒரு கட்டத்தில் இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாததால் தான் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன். மேலும் என்னையே நம்பியிருந்த என் பெற்றோரையும் என்னிடமிருந்து பிரித்து விட்டார் என்று வேதனையோடு கூறியுள்ளார்.

Categories

Tech |