புயல் எச்சரிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
இதற்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று தலைமை செயலகத்தில் வைத்து தலைமைச் செயலாளர் இறையன்பு சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பெய்யும் வடக்கிழக்கு பருவமழையின் தன்மை, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.