தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனது 3-வது படமான கோல்டு படத்தை இயக்குவதற்கு அல்போன்ஸ் புத்திரன் 7 வருட இடைவெளி எடுத்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸ் ஆனதிலிருந்து ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இதனால் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் நேரம் 2 மற்றும் பிரேமம் 2 திரைப்படத்தை இயக்குகிறேன் என்று சொல்லவில்லை.
நானும் என்னுடைய பட குழுவினரும் உங்களுடைய வெறுப்பை சம்பாதிக்கும் படியாக ஒருபோதும் படத்தை எடுத்ததில்லை. எனவே என்னையும் படகுழுவையும் சந்தேகிக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் நினைப்பது போன்று கோல்ட் படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற விமர்சனங்களை மட்டும் பதிவிட வேண்டாம். மேலும் உங்களில் யாருக்காவது கோல்ட் படத்தை இயக்கிய அனுபவம் இருந்தால் கண்டிப்பாக எதிர்மறை விமர்சனங்களை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.