மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் லுலா நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 35 வயது ஆசிரியை தொடக்கக் கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடமெடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை எடுக்கும் வகுப்பில் பயின்று வரக்கூடிய 6 வயது மாணவன் கையெழுத்து சரிவர இல்லாமல் எழுத்துக்கள் மிக மோசமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவனை கடுமையாக தாக்கி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி இது பற்றி பெற்றோரிடம் கூறினால் மேலும் தாக்குவேன் எனவும் ஆசிரியை மிரட்டியுள்ளார். இதையடுத்து ஆசிரியை செயல் தொடர்பாக அம்மாணவன் தன் தந்தையிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தாக்கிய ஆசிரியை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.