Categories
இந்திய சினிமா சினிமா

பட தயாரிப்பால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம தெருவுக்கு வந்துட்டோம்…. பேட்டியில் கண்கலங்கி அழுத அமீர்கான்…!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், ஒரு வருட காலத்திற்கு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் அமீர்கான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜாகிர் உசேன். இவர் ஸ ராக்கெட் என்ற படத்தை தயாரித்த போது அந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் ஜிதேந்திரா, நடிகை ரேகா, காதர் கான் போன்ற பெரிய பிரபலங்களை படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார்.

அவர்கள் என்னுடைய தந்தை பிரபலமான தயாரிப்பாளர் இல்லை என்பதால் சரியான முறையில் கால்ஷீட் கொடுக்கவில்லை. இதனால் அப்படம் முடிய 8 வருடங்களுக்கு மேல் ஆனது. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தெருவுக்கு வந்து விட்டோம். கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வந்து கடனை திருப்பி கேட்ட போது என் தந்தை அவர்களிடம் கெஞ்சுவார். அப்போது எனக்கு வெறும் 10 வயது தான் என்று கூறினார். மேலும் இதை கூறும் போது நடிகர் அமீர்கான் கண்கலங்கி அழுதுவிட்டார்.

Categories

Tech |