Categories
தேசிய செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில்…. சிறுமியை கடத்திய இளைஞர்…. 1 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரபிரதேசம் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் 13 வயது சிறுமி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் சிறுமியை கடத்தியுள்ளார். அந்த இளைஞர் சிறுமியை தெரியாத இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் சிறுமியை மீட்டு 1 மணிநேரத்தில் அந்த 27 வயது இளைஞரை கைது செய்தனர். குடும்ப உறுப்பினர்களின் புகாரின் படி சிறுமியை கடத்தியவர் மீது போக்சோ சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய பொறுப்பாளர் ராஜ்குமார் வர்மா தெரிவித்தார்.

Categories

Tech |