முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நெருங்கிய தோழி சசிகலா, தன் ஆதரவாளர்களோடு பேரணியாக வந்து சென்னை மெரினாவிவுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அ.தி.மு.க-வின் உண்மை தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கின்றனர்.
நிச்சயம் 2024 ஆம் ஆண்டில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். தன்னை பொருத்தவரை நான் தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைக்கிறேன். அந்த ஒரே எண்ணத்தில் தான் ஜெயலலிதா அம்மா செயல்பட்டார். ஆகவே அவர் வழி தான் என்னுடைய வழி. இதற்கிடையில் எனக்கு என்று தனிவழி கிடையாது. எப்போதும் நான் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்” என்று அவர் பேசினார்.