உலகம் முழுவதும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரின் ஐந்து முக்கிய நகரங்களில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1930 ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இந்த உலக கால் வந்து போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில் கால்பந்து போட்டியை வரவேற்கவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தற்போது FIFA இட்லி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டலில் தயாரிக்கும் இந்த இட்லிக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. சாதாரண இட்லி போல் இல்லாமல் பெரிய இட்லியில் கால்பந்து போன்ற அச்சினை பயன்படுத்தி இந்த FIFA இட்லி தயார் செய்யப்படுகிறது. பல வகையான சட்னி கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஒரு இட்லியின் விலை 90 ரூபாய் ஆகும். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
FIFA iddlies , dedicated to all football fans (Fiddlies) pic.twitter.com/KRPcJCc42Z
— Anu Satheesh 🇮🇳🚩 (@AnuSatheesh5) November 27, 2022