நடிகர் சங்கத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் 23-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இதில் தபால் தபால் ஓட்டுக்களை போடுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நடிகர்சங்க தேர்தல் செல்லாது என்று தெரிவித்தும் 3 மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்தவேண்டுமென தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பொதுச்செயலாளர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.அதில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்திருந்தார். இன்று இதன் விசாரணை நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு விசாரணைக்கு வந்த போது தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து , தமிழக அரசு பதில்தர கோரி ஏப்ரல் 8ஆம் தேதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.