வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கடலில் 2 நாட்கள் நிலை கொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையை கொடுக்க உள்ளது. அதன்படி, டிச.8ல் 13 மாவட்டங்களில் மிக அதிகனமழையும், 9ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுபெற்று புயலாக மாறும் எனவும் இதனால், பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.