தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் தற்போது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கி விட்டு சமைப்போம். அப்படி சமூக வலைதளங்களிலும் சில (முகம் முழுக்க அசிங்கத்தை முகமூடியாய் அணிந்தபடி) அருவருப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தும் போது ஒதுங்கி விடுகிறேன்.
அவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் அதைக் கெட்ட வார்த்தைகளால் சொல்லும் போது தான் மனம் வலிக்கிறது. என் மனம் கூசுகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் பார்த்திபனின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கிவிட்டு சமைப்போம்,அப்படி சமூக வளைத்தளங்களிலும் சில -……… (முகம் முழுக்க அசிங்கத்தை முகமுடியாய் அணிந்தபடி)அருவருப்பான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது ஒதுக்கிவிடுகிறேன் நான். அவர்களுக்கு “பிடிக்கவில்லை”என்ற கருத்தை வரவேற்கிறேன்.ஆனால் அதை கெட்ட conti… pic.twitter.com/lWUPLUav3H
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 4, 2022