அமேசான் பெரும் பணிநீக்கத்திற்கு தயாராகி வருகிறது. 10,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 20,000ஆக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. பணிநீக்கம் அனைத்து தரவரிசை ஊழியர்கள் மீதும் இருக்கும் என்று ‘கம்ப்யூட்டர் வேர்ல்ட்’ இணையதளம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வரிசையில் இப்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அமேசான் இறங்க இருக்கிறது. மேலும், இந்த தகவல் உண்மையாக இருந்தால், இது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கமாக இருக்கும்.