Categories
சினிமா தமிழ் சினிமா

“இது விஜய்யின் திரைப்பயணத்திலேயே மிகவும் அதிகம்”… வாரிசு படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தளபதி விஜய் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான சூட்டிங் பல்வேறு மாதங்களுக்கு முன்பே துவங்கி தற்போது வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படம் வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் டீஸர் தொடர்பாக அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் நடிக்கும் வாரிசு பட ரிலீஸ் பற்றி ஒரு தகவல் வந்திருக்கிறது. அதன்படி, வாரிசு படம் அமெரிக்காவில் 600-க்கும் மேற்பட்ட லொகேஷன்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. இது விஜய்யின் திரைப் பயணத்திலேயே மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |