நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் வழக்கம் போல தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் டெல்லியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது.
அதாவது மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தம், மனசோர்வு, தூக்கமின்மை மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் அனைவரும் அச்சமின்றி தேர்வு எதிர்கொள்ள நாளை அனைத்து அரசு பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்கும் விதமாக கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் தங்களின் மன அழுத்தத்தை கையாளுவதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.