உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நமது இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புவது வழக்கம். இதுகுறித்து ஆண்டுதோறும் உலக வங்கி அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம் இந்த ஆண்டில் அதிக அளவில் இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியா 84.4 மில்லியன் டாலர்களை பெற்றது.
இது இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் ஆகும். இந்நிலையில் வெளிநாடுகளில் அதிகரித்துள்ள ஊதிய உயர்வு மற்றும் வளர்ந்த நாடுகளில் நிலவும் வலுவான தொழிலாளர் சந்தைகள் இதற்கு காரணமாக செயல்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் அதிக அளவில் இந்தியர்கள் வெளிநாடுகளில் அதிக வருமானம் கிடைக்கும் என்று வேலைக்கு செல்கின்றனர். இதனால் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவு இந்த ஆண்டு 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதனையடுத்து குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் குடும்ப வருமானத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவை தொடர்ந்து மெக்ஸிகோ, சீனா, எகிப்து ஆகிய நாடுகள் உள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.