Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா…. வதந்தி பரப்பியவர் கைது…..!!

முட்டை , கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கோழிகறி ,முட்டை சாப்பிடுவதால் கொரோனா போன்ற எந்த பாதிப்பும் வராது என்று கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் , தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் தலைமையில் 26 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தமிழக கேரளா எல்லையில் சிறப்பு குழுக்கள் தடுப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றன கோழிக்கறி மூலம் கொரோனா நோய் பரவும் என்று வதந்தி பரப்பிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பறவை காய்ச்சல் , கொரோனா வைரஸ் என எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது. ஆகையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை . தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணைகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Categories

Tech |