Categories
இந்திய சினிமா சினிமா

ஒரு வழியாக முடிவுக்கு வந்த அவதார்-2 பட விவகாரம்….. வெளியான தகவல்….!!!!

சென்ற 12 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஹாலிவுட் டிரைக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகிய அவதார் படம் உலகமெங்கிலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் அவதார் – வே ஆப் வாட்டர் என்ற பெயரில் வரும் டிச..16 ஆம் தேதி வெளியாகயிருக்கிறது.

சென்ற சில நாட்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தை திரையிடுவது குறித்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பங்கு தொகை குறித்த பிரச்னை ஏற்பட்டது. அதாவது, விநியோகஸ்தர்கள் முதல் 2 வாரங்களில் இப்படத்திற்கு வசூலாகும் தொகையில் வழக்கமாக தாங்கள் பெற்றுவரும் பங்கு தொகையை விட 5% கூடுதலாக கேட்டு நிர்ப்பந்தித்தனர்.

எனினும் திரையரங்கு உரிமையாளர்கள் வழக்கமாக கொடுக்கப்பட்டு வரும் பங்கை மட்டுமே கொடுக்க இயலும் எனவும் இப்பிரச்னை நீடித்தால் அவதார்-2 படத்தை கேரளாவில் திரையிடமாட்டோம் எனவும் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் விநியோகஸ்தர்கள் வழக்கமான பங்குத்தொகை பெற சம்மதம் தெரிவித்ததால் தற்போது இப்பிரச்னை சுமூகமுடிவுக்கு வந்துள்ளது.

Categories

Tech |